தேசிய அடையாள அட்டை இன்றியும் ஓ.எல். பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

