உள்நாடு

கட்டார் நாட்டின் முன்னாள் ஆட்சியாளரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, ACJU நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கட்டார் தூதரகத்திற்கு விஜயம் 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கட்டாரின் முன்னாள் ஆட்சியாளர் ஷெய்க் ஹமத் பின் கலீஃபா ஆல்-தானி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, இன்று (14) கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, தூதரகத்தின் பொறுப்பதிகாரியான அலீ பின் சாலிம் அல்-நுஐமியைச் சந்தித்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இரங்கல் செய்தியைக் கையளித்தனர்.

இவ்விஜயத்தில், ஜம்இய்யாவின் பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டதுடன், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தமது இரங்கல் செய்தியைப் பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *