Uncategorized

பல்கலை மாணவர்களுக்கு மடிக் கணனிகள் அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணனிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் 23ஆம் கட்ட விநியோகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹாஷிம் உமர் பௌண்டேசன் தலைமையகத்தில் (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவு பிரதானி சீ.பி.எம்.ஷியாம், உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், ஹஸ்மா அழகுக் கலை நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.என்.எப்.ஹஸ்மா, ரிக்கா டிரேடர்ஸ் உரிமையாளர் ரிகாஸா மஸாஹிர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழன் பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம்.ஜௌபர், சுயாதீன தொலைக்காட்சி நிறுவன தமிழ் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேத்தா, அமைப்பின் பணிப்பாளர் மரியம், இணைப்பாளர்களான ஆகிப் மொஹமட் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகர்
புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏ.கார்த்திக்கா -கிளிநொச்சி, என்.ஆர்.நுஹா-மாவத்தகம, சீ.எச்.எப்.பிக்ரா-மல்வானை, எம்.எஸ்.எப்.ரிமாஸா-கொச்சிக்கடை மற்றும் எப்.எம்.பஸ்லான்-அநுராதபுரம் ஆகியோருக்கு புரவலர் ஹாஷிம் உமருடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மடிக் கணனிகளை வழங்கி வைத்தனர்.

இந்நிலையில் ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ‘நலிந்த ஊடகவியலாளர்களுக்கு கரம் கொடுக்கும்’ திட்டத்தின் கீழ் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சத்தாருக்கு ஓர் இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அஷ்ரப் ஏ. சமட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *