நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளதென நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதில்,உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் அடங்குவர் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தற்போதும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்,சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்புக் கட்டமைப்பு, மற்றும் கைதிகளைச் சோதனையிடும் உடல் ஸ்கேனர் இயந்திரங்கள் என்பன கைதிகளால் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
