உள்நாடு

கொழும்பு சிகரம் அபிவிருத்தி மன்றத்தினால் கலாநிதி எஸ்.எம். ரஸ்மி ரூமி கலாநிதி மீரான் ஜீ. ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு

கொழும்பு சிகரம் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில், உலகத் தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவரும் கலை, பண்பாட்டு மற்றும் சமூகப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருபவருமான கலாநிதி எஸ்.எம். ரஸ்மி ரூமி மற்றும் சர்வேதேச துணை பொதுச்செயலார் கலாநிதி டொக்டர் செய்யது அஹமது மீரான்ஜி ஆகியோருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு முருகன் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அத்தியாக பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

கொழும்பு சிகரம் அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ரஞ்சனி சுரேஷ் தலைமையில், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து கலாநிதி எஸ்.எம். ரஸ்மி ரூமி மற்றும் கலாநிதி டொக்டர் செய்யது அஹமது மீரான்ஜி விருதினை வழங்கி வைத்தனர்.

தமிழ் கலை, பண்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த சிறப்பு கௌரவிப்பு இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கலாநிதி எஸ்.எம். ரஸ்மி ரூமி சர்வதேச மட்டத்திலான பணிகளையும், தமிழ் மொழி, கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பாராட்டிப் பேசினர்.

விருதைப் பெற்றுக்கொண்ட கலாநிதி எஸ்.எம். ரஸ்மி ரூமி , தமக்கு வழங்கப்பட்ட கௌரவத்திற்காக கொழும்பு சிகரம் அபிவிருத்தி மன்றத்திற்கும் அதன் தலைவர் ரஞ்சனி சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வு கலை, பண்பாடு மற்றும் சமூக சேவையில் ஈடுபட்ட பல முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் சிறப்புற நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *