உள்நாடு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

வெளிநாட்டில் தொழில் புரிந்து வருபவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சார்பில் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த 47 பிள்ளைகளுக்கு   கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு  பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் தலைமையில் பொலன்னறுவையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் 2354 பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளதுடன்   இதன் முதற் கட்டமாக 47 பிள்ளைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.  கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக 70 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்படவுள்ளது.

இந்நிகழ்வின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *