சுரேஷ் சலே தொடர்பான வழக்கில் தீர்ப்பு இன்று
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கில், மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்கான சட்டமா அதிபரின் கோரிக்கை குறித்து இன்று (10) நீதிமன்ற உத்தரவு அறிவிக்கப்படவுள்ளது.
இந்த மனு கடந்த ஜூன் 4ஆம் திகதி பரிசீலிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாகவே தெரிவித்திருந்தது.
