உள்நாடு

சாய்ந்தமருது அல்ஹிலாலில் அதிபர்களின் பிரியாவிடை நிகழ்வு

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் அதிபராக, பிரதி, உதவி அதிபர்களாகக் கடமையாற்றி, பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளுக்கு அதிபராக, பிரதி அதிபர்களாக இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்களின் பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.

பாடசாலை கல்வி சமூகத்தின் ஏற்பாட்டில், பாடசாலையின் அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி, இடமாற்றம் பெற்று தற்போது சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றும் எம்.எச். நுஷ்ரத் பேகம், பிரதியதிபராகக் கடமையாற்றி, தற்போது நிந்தவூர் இமாம் றூமி வித்தியாலயத்தில் அதிபராகப் கடமையாற்றும் ஏ.பி. செரோன் டில்ராஸ், உதவி அதிபராகப் கடமையாற்றி, தற்போது மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் எஸ்.எம். உவைஸ் ஆகிய இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்களுக்கு அவர்களது அர்ப்பணிப்பான சேவையைக் கௌரவிக்கும் முகமாக நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புகளும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத்தின் மகன் அல்ஹாபிழ் கே.எம். ஷைBபான் நமி மிகக் குறுகிய காலத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து அல்ஹாபிழ் பட்டம் பெற்றமைக்காக இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத் அவர்கள் தன் மனம் கோணாது பாடசாலைக்கு உதவி என்று வருகின்ற போது, எந்த உதவியாக இருந்தாலும் அதனை இன் மனங்கொண்டு ஏற்று, சளைக்காது செய்துவரும் அயராத, அர்ப்பணிப்பான அவரது அரும் பெரும் சேவைக்காக பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் நஸ்ரின் சாஜிதா, கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். பைஸல், சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் மகா வித்தியாலய அதிபர் எம்.சி. நஸ்லின் றிப்கா, கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம்.அன்சார், பாடசாலையின் பிரதியதிபர்களான எம்.எச். லாபிர், ஏ.பி. ரோஷன் டிப்ராஸ், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *