உள்நாடு

அனுராதபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற “சீ மெகா கோல்டன் எக்ஸலன்ட் விருது வழங்கும் விழா 2026”

சீ அகடமி மற்றும் சைன் புரொடக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற “சீ மெகா கோல்டன் எக்ஸலன்ட் விருது வழங்கும் விழா 2026” (31) அனுராதபுரம் சி.டி.சி. ஹோல் மண்டபத்தில் அதன் பணிப்பாளர் திருமதி ஜம்லத்துல் நளீரா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுஹா ட்ரேட் சென்டர் நிறுவனத்தின் பணிப்பாளர் கே. ஜன்வர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக ஆர்.ஜே. மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான ஏ.எம். இன்ஷாப், ரிச் வேர்ல்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மொஹமட் பாசில் ரஷாத், ரீனா இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எஸ். நாதியா ரிப்னாஸ், நியூ ஓரியன்ட் ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.என்.ஏ. நாஸிர், வொண்டர் வுமன் சஞ்சிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.என்.எப். ஹஸ்மா, ஏ.என். பிரைட் ஸ்கின் நிறுவனத்தின் உரிமையாளர் நஸார் நஜா, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் இஷாத் ஹமீட் மற்றும் அனுராதபுர மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தம்சீர் ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மருதாணி போட்டி, மணப்பெண் அலங்காரப் போட்டி, சித்திரப் போட்டி, கைப் பணி அலங்கார போட்டி மற்றும் கேக் அலங்காரப் போட்டி என்பன வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதுடன், வெற்றியாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் சமூக, கல்வி, தொழில், கலை மற்றும் மனிதாபிமான சேவைகளில் சிறந்து விளங்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *