உள்நாடு

கற்பிட்டி முகத்துவாரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்

கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சமய சமூக நடுநிலை (CSR) மையத்தின் நிதி பங்களிப்புடன் கபோட் மற்றும் பிரஜைகள் பேரவையின் அனுசரணையுடன் ஒன்றிணைந்து எழுவோம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி முகத்துவாரம் சிங்கள பாடசாலையில் இலவச மருத்துவ முகாம் ஒன்று 2026 மே மாதம் 23 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற உள்ளது.

கற்பிட்டி செடோ சிறீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் பிரஜைகள் பேரவையின் கற்பிட்டி அழைப்பாளருமான ஏ.ஆர். முனாஸ் தலைமையில் இடம்பெற உள்ள இவ் இலவச மருத்துவ முகாமில் வைத்தியர்களான அமானா, ஹஸ்னாஸ் மற்றும் தனுஷ்க ஆகியோர்களுடன் மருந்தாளர்கள் மற்றும் தாதிகள் கலந்து கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *