உள்நாடு

வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை

பேராசிரியர் சோ. சந்திரசேகம் ஞாபகார்த்த மன்றம் நடாத்தும் வித்தியாநிதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் நான்காவது நினைவுப் பேருறை எதிர்வரும் சனிக்கிழமை (23) பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வை பேராசிரியர் சோ சந்திரசேகரம் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையேற்று நடாத்துகின்றார்.

மேலும் இந்நிகழ்வின் வரவேற்புரையை இச் சங்கத்தின் இணைச் செயலாளர் கலாநிதி ச. அதிரதனும், பேருரையாளர் அறிமுகத்தினை இச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் த. இராஜரட்ணமும் நிகழ்த்துகின்றனர்.

அத்துடன் நினைவுப் பேருறையை வடபுலத்து நூலாசிரியர்கள் எழுதிய “மலையக நாவல்கள்” எனும் தலைப்பில் வாழ்நாள் பேராசிரியர் வ. மகேஸ்வரன் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *