பிறை தென்படவில்லை; துல் கஃதஹ் 30ஆக பூர்த்தி
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மே மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை (திங்கட்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில் ஹிஜ்ரி 1447 துல் கஃதஹ் மாதம் 30 நாட்களாக நிறைவடைந்துடன் 2026 மே மாதம் 19ஆம் திகதி ஹிஜ்ரி 1447 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் 1ஆம் பிறை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.
