துல்ஹிஜ்ஜா பிறை பார்க்கும் மாநாடு இன்று
ஹிஜ்ரி 1447 துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மே மாதம் 17 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்
பிறைக் குழு தலைவர் மெளலவி M.B.M. ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள் , தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
