தேருநர் இடாப்பு மீளாய்வு – 2026;உரிமைகள் மற்றும் எதிர்ப்புகள் சமர்ப்பிக்கும் காலம்மே 05 முதல் ஜூன் 01 வரை
2026 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு மீளாய்வு திருத்த நடவடிக்கையின் கீழ் உரிமைகள் மற்றும் எதிர்ப்புகளை சமர்ப்பிக்கும் காலம் மே மாதம் 05 ஆம் தகதி முதல் ஜூன் மாதம் 01 ஆம் தகதி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி
- தற்போதைய ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல்
- அவற்றுள் நீக்கப்படவுள்ள பெயர்களின் பட்டியல்
- சேர்க்கப்படவுள்ள பெயர்களின் பட்டியல்
இவற்றை ஆய்வு செய்து தங்களது அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை சேர்க்க உரிமை கோர முடியும். அதேபோல் வாக்காளராக தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் இந்த 28 நாட்கள் காலப்பகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேருநர் இடாப்பு மீள்பார்வை
தேருநர் இடாப்பு பெயர் பட்டியல் கீழ்க்கண்ட இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். அவற்றை ஆய்வு செய்து உரிமைகள் அல்லது எதிர்ப்புகளை சமர்ப்பிக்கலாம். அதற்கான படிவங்களை கீழ்க்கண்ட இடங்களில் பெறலாம்
1.மாவட்ட தேர்தல் அலுவலகம்
2.பிரதேச செயலாளர் அலுவலகம்
3.உள்ளுராட்சி மன்றங்கள்
3.கிராம அலுவலகர் காரியாலயம்
மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் (www.elections.gov.lk) மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான தேருநர் இடாப்பு விபரங்களைப் பரிசோதிக்கலாம். தங்களது பெயர் சேர்க்கப்படவில்லை என்றால் அங்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலமாக அல்லது நேரடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.
நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் முக்கிய உரிமை வாக்குரிமை ஆகும். ஆகவே தேருநர் இடாப்பில் தங்களது பெயர் இடம்பெறுவது மிக அவசியமானதாகும். தேருநர் இடாப்பில் பெயர் சேர்த்தல் மற்றும் வாக்களித்தல் என்பது குடிமக்களின் உரிமை மட்டுமல்ல பொறுப்பும் ஆகும். வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது பயனற்றதாகும். எனவே தங்களது குடும்பத்தினர் அயலவர்கள் மற்றும் சமூகத்தினருக்கும் இதை பற்றி அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வாக்கு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
நன்றி,
நம்பிக்கையுடன்
ரோஹண ஹெட்டியாரச்சி
நிறைவேற்று பணிப்பாளர்
