உள்நாடு

மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட தம்புள்ளை வைத்தியசாலை.

மாத்தளை எம்.சதூர்தீன் மத்திய மாகாண சபையினால் நிர்வாகிக்கப்பட்டு வந்த தம்புள்ள வைத்தியாசாலை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லியனகெ ரனவிர தெரிவித்தார்.

தம்புள்ள நகர் மத்தியில் இயங்கி வந்த குறித்த வைத்தியசாலையில் நீண்ட காலமாக எதிர் நோக்கி வந்த இடநெருக்கடி மற்றும் பல குறைபாடுகளைக் கருத்திற்கொண்டு இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்வைத்தியசாலையை பிரிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தம்புள்ள நகரை அண்மித்த பகுதியில் இப்புதிய வைத்தியசாலையை நிர்மாணிக்க 5ஏக்கர் காணி இனங் காணப்பட்டுள்ளது சகல வசதியுடன் கூடிய இவ்வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசினால் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாண சபைக்கு கீழ் உள்ள இவ்வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட்டு மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்துவதற்கு அரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது தற்போது இவ்வைத்தியசாலை வாடுகளில் 350கட்டில்கள் காணப்படுகின்றன.

இதனை 900 ஆக அதிகரிப்பதற்கு புதிய வைத்தியசாலை கட்டிடமாக இது அமைய உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *