விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதி காலி.அடுத்த ஆறு மாதத்துக்குள் தேர்தல்.
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்புஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அரசிதழில் வெளியீட்டப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும்.தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ச. ஜோசப் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார்.
ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ந்தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது.
பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் ச. ஜோசப் ஜோசப் விஜய்யிடம் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.
எனவே, அவரே மீண்டும் களம் காண்பாரா, அல்லது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினே களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், த.வெ.க. தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், லால்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு. ப. கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் ச. ஜோசப் விஜயின் ராஜினாமாவைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அரசிதழில் வெளியீடு. இரண்டு தொகுதிகளில் வென்ற ச. ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் இனி இடைத்தேர்தல் நடத்த பணிகளை தொடங்கும்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
