அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் வெள்ளத்தால்பாதிக்கப்பட்ட புத்தள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைப்பு
நேற்று புதன்கிழமை (13) ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தள நகரில் பாதிக்கப்பட்ட வாஹித் பள்ளி, தாரிக் பள்ளி, அக்ஸா பள்ளி மற்றும் முல்லிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும், மணல்தீவு குட்ஸைட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் நாகூர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் சமைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பொருளாதார மற்றும் சதுர உதவிகளை வழங்கிய அனைவரையும் அல்லாஹ் தஆலா கபூல் செய்வானாக.
குறிப்பாக, நாகூர் மஸ்ஜித் நிர்வாகத்தின் தலைவர் சகோதரர் ஹஸீப் அவர்களுக்கும், நிர்வாக உறுப்பினர்களுக்கும், மேலும் உதவியாக இருந்த அனைவருக்கும் ஜம்இய்யா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
அல்லாஹ் தஆலா அனைவரின் நற்செயல்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சிறந்த நன்மைகளை வழங்குவானாக. ஆமீன்.




சமூகப் சேவை பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை
