அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் வடமத்தியில் கள விஜயம்
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் வடமத்திய மாகாணத்திற்கு களவிஜம் ஒன்றை மேற்கொண்டு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வை சந்தித்தார்.
ஆளுநர் அலுவலகத்தில் கடந்த (11) இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது வடமத்திய மாகாணத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகள், மாகாண சபையால் மாகாணத்தில் செயற்படுத்தப்படவுள்ள எதிர் காலத் திட்டங்கள் மற்றும் விவசாய உற்பத்தி திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரதான செயலாளர் ஷீன் ஷீ , வடமத்திய மாகாண பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயசிங்க மற்றும் ஆளுநரின் செயலாளர் நந்தன கலகொட ஆகியோரும் கலந்து கொண்டனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
