Wednesday, May 13, 2026
Latest:
விளையாட்டு

மழையுடனான காலநிலை; உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதன்படி, கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், ‘பி’ பிரிவின் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆளுநர் கிண்ணத் தொடர் ஆகியன காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழையுடனான காலநிலை சீரடைந்த பின்னர், திருத்தப்பட்ட போட்டி அட்டவணைகள் அறிவிக்கப்படும் என கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தடகள தெரிவுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தடகள சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *