இன மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவோரு க்கு எதிராக தண்டனை வழங்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவோம்; பெளத்தம் முஸ்லிம் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி
பௌத்தம் – முஸ்லிம் கலந்துரையாடல் எனும் சிங்கள மொழி மூலம் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று (12.05.2026) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தன்வீர் இஸ்லாமிக் அகாடமி நிறுவனத்தின் அனுசரனையில் வெளியீட்டு வைபவம் மிகப் பிரமாண்டமான ரீதியில் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு சிரேஷ்ட பேராசிரியர் முன்னாள் உப வேந்தருமான சுமனசிறி தேரர் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பௌத்தம் மற்றும் மத விவகார, கலாச்சார அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி மற்றும் ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷேக் அர்க்கம் நுராமித் மற்றும் மண்டபம் நிறைந்து பௌத்த முஸ்லிம் கல்வியலாளர்கள், பௌத்த குருக்கள் கிறிஸ்தவ பாரதியார் கள், மௌலவி மார்கள் அரசியல்வாதிகளும் காணப்பட்டனர்
நூலினை பிரதம அதிதி கணினி வடிவமைப்பில் திறந்து வைத்தார். அத்துடன் நூலசிரியர்கள் கலாநிதி அர்சாத் சிராஜ் மற்றும் கலாநிதி ரமேஷ் மதுசங்க ஆகியோர்கள் இணைந்து அதிதிகளுக்கு நூல்களையும் வழங்கி வைத்தார்
நூல் விமர்சன உரையையும் பிரதான உரையையும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் சமந்த இலங்கக்கோண் உரை நிகழ்த்தினார். இந்நூல் வெளியீட்டையும். நூல் பதிப்பு விடயங்களையும் தன்வீர் அகடமி அனுசரனை வழங்கியிருந்தது.
இந்நூல் மேலும் ஆங்கில மொழி மூலம் வெளிவரவுள்ளது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் செனவி –
இந் நிகழ்வை நான் அவதானிக்கும்போது இவ்வாறுதான் பௌத்த -முஸ்லிம் ஏனைய மும் மதங்கள் பிரதிபலிக்கும் கல்வியலாளர்கள்,ஊடகவியலாளர்கள் மதப் பெரியார்கள். பட்டதாரி மாணவர்கள் கொண்டதொரு சிறப்பான ஒரு மண்டபம் மக்கள் நிறைந்திருக்கின்றது.
இதனையே எமது அரசாங்கம் இன ஐக்கியம் , தேசிய ஐக்கியத்தை இந்த நாட்டில் எதிர்பார்க்கின்றோம். இந்த அரசாங்கம் ஒருபோதும் மத. இன ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக தண்டனை வழங்க கூடிய சட்டத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் இயற்றுவோம்.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்டத்தை ஏற்றுவதற்கு எங்களிடம் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது அரசியல் உள்ளனர்.
எதிர்காலத்தில் கல்வி சீர்திருத்தம் ஏற்படும் மிடத்து பாடசாலைகளில் இருந்து அவரவர்கள் பாவனாக்கள் மதங்கள் பற்றி ஒர் பாடத்தினை அறிமுகப்படுத்துவோம் அமெரிக்காவில் வாழ்ந்து அங்கு பௌத்த நிலையமொன்று அமைத்து கற்பிக்கும் 98 வயதுடைய ஓர் ஆமதுரு நான் சந்தித்தபோது மத பாவானாக்ள் பாடசாலையில் ஏற்படுத்துமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தார் அதே போன்று மத விவகார அமைச்சர் என்ற் ரீதியில் நான் அண்மையில் மதீனாவுக்கு சென்ற முதலாவது மத விவகார அமைச்சர் நானாகவே இருப்பேன் என நினைக்கின்றேன்.
முஸ்லிம் பட்டதாரி பாலி பல்கலைக்கழகத்தில் கற்று அவருடைய சக மாணவன் கற்ற பட்டதாரிகள் இரண்டு பேரும் இணைந்து சிங்கள மொழி மூலம் இணைந்து பௌத்த மாணவர்கள் கையில் அழகாக பௌத்தம் இஸ்லாம் கலந்துரையாடல் பெரிதும் நன்மை பயக்கும் ஒருத்தர் மற்றவருடைய மதம் கலாச்சாரம் விழுமியங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த நூல் மிகவும் நன்மை பயக்கும் இவ்வாறு சிறந்த நிகழ்வுகளை அவர்களது வீடியோக்கள் ஊடாக மும் மொழி மத நிலையங்களை கற்கும் மாணவர்களுக்கு பௌத்தம் பற்றிய இஸ்லாமிய மாணவர்களுக்கும் இஸ்லாம் பற்றி பௌத்த துறவிகளுக்கும் ஓர் நல்லிணக்கம் மதங்கள் பற்றிய சிறந்த தெளிவு பெற்றுக் கொடுப்பது அவதானித்தேன் அதற்காக தன்வீர் அகடமி திறம்படச் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்காக நான்
நன்றியறிதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு இணை நூலாசிரியர்கள் தமது ஏற்புரையின்போது கலாநிதி அஷ்ஷேக் அசாத் சிராஜ். இலங்கையில் புத்தளம் பிறந்து மலே இனத்தின் ஜாமியா நளீமியா அதன் பின்னர் பௌத்த பாலி பல்லைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒரே ஒரு முஸ்லிம் மாணவன் அதன் பின்னர் மலேசியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அதன் பின்னர் கலாநிதி படிப்பை முடித்து தற்போது மலேசியாவில் விரிவுரையாளராகவும்
கடமையாற்றுகிறார்.
மற்றைய நூலாசிரியர் ரமேஷ் மதுசங்க பொளத்த பாலி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாளிகாகந்த பிரிவினையில் கல்வி கற்று பௌத்த மத சம்பந்தமான தொலைக்காட்சி மற்றும் பல்வேறு நூல்கள். உரைகளை நிகழ்த்துபவர் அவர் இஸ்லாம் மத பற்றி கற்றறிந்து அதனை சிங்கள மொழி மூலமான பேச்சாளர் ஆவார்.













(அஷ்ரப் ஏ சமத்)
