உலகம்

தமிழக முதல்வராக பதவியேற்றார் C. ஜோசப் விஜய்

விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவால் தவெகவின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10. 17 மணிக்கு நடைபெறும் விழாவில், தமிழகத்தின் 18-வது முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றார் அவருக்கு ஆளுநர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவது அவசியமானது. இதனால், காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். முதல்கட்டமாக, 5 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தது. பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்தது. ஆனால், தவெகவுக்கு ஆதரவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் விசிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

விசிக சனிக்கிழமை மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது.அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 120 இடங்கள் கிடைத்தன.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடந்தது.

120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை சனிக்கிழமை மாலை வழங்கினார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவருக்கு நுழைவு வாயில் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றார்கள்.

நேரு ஸ்டேடியத்திற்கு வருகை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை தவெக தலைவர் விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது.முதலில் ஆளுநரிம் விஜய் புதிதாக அமைச்சராக பதவி ஏற்கும் நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முதல்வர் பதவி பிரமாணம் ஏற்கும் நடைமுறையை ஆரம்பித்தது. முதலில் வந்தே மாதரம் பாடல் மற்றும் தேதிய கீதம் பாடப்பட்டது.

தமிழகத்தின் 18-வது முதல்வராக ஞாயிற்றுக்கிழமை காலை 10.17 மணிக்கு முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றார் அவருக்கு
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முநல்வராக சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக புஸ்ஸி என்.ஆனந்த்,
ஆதவ்அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன்,
வெங்கடரமணன், நிர்மல்குமார்.
ராஜ்மோகன், டி.கே.பிரபு,
கீர்த்தனா ஆகியோர் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள் அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
செய்து வைத்தார்.

இந்த விழாவில் விழாவில்

முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன், தமிழசை சௌந்தராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர் கே. நவாஸ் கனி எம். பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. எம். ஷாஜஹான், எஸ். எஸ். பி. சையது பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சி. ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்ற போது ஜோசப் விஜய் என்று கூறியதும் எனக்கூறி தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டது தொண்டர்கள் கைத்தட்டல் மற்றும் கோஷங்களை எழுப்பினார்கள். ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் உறுதிமொழி கூறியபோது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

அதேபோல் ஒவ்வொரு அமைச்சராக பதவி ஏற்ற போது தொண்டர்கள் கைத்தட்டல் மற்றும் கோஷங்களை எழுப்பி தொண்டர்கள் உணர்ச்சிப்பட்டு உற்சாகப்படுத்தினார்கள்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *