உள்நாடு

அம்பாறை மாவட்ட தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி விரைவில் நியமிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கேள்விக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார்.

கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் பாராளுமன்றம் இன்று (07.05.2026) நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினால் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு. சுனில் குமார கமகே அவர்களிடம் வாய்மூல கேள்வியாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி பேசும் பிரதேச செயலகங்களுக்கான மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி தற்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்ததோடு நிரந்தரமாக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்,தற்போது நேர்முகப்பரீட்சை நடைபெற்று கொண்டிருக்கிறது விரைவில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் பிரதேசங்களுக்கான நிரந்தர இளைஞர் அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் 13 விளையாட்டு உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான விளையாட்டு உத்தியோகத்தர் இன்மையால் பிரதேச விளையாட்டு போட்டிகள் நடைபெறாமல் மாவட்ட விளையாட்டுப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதனை நிபர்த்தி செய்ய முடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

பல மாவட்டங்களில் விளையாட்டு உத்தியோகத்தர்கள் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அவ்வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய வேண்டியது மாகாண சபையாகும். இருந்தாலும் விளையாட்டு போட்டியுடன் இது தொடர்புடையதனால் அதற்கான சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் விரைவாக கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத்தருவோம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதிலளித்தார்.

(கே எ ஹமீட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *