உள்நாடு

இலங்கை ஹஜ் குழுவிற்கு சவுதியில் அமோக வரவேற்பு

இந்த ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, 325 இலங்கை ஹஜ் பயணிகளைக் கொண்ட முதல் குழுவினர் நேற்று (2) சவுதி அரேபியா சென்றடைந்தனர்.

சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், திருமதி அஸ்மியா அமீர் அஜ்வாத் மற்றும் பதில் துணைத் தூதுவர் மஃபுசா லாபிர் ஆகியோருடன் இணைந்து, ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல்அஸிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை யாத்ரீகர்களை அன்புடன் வரவேற்றார்.

அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வாத், யாத்ரீகர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஹஜ் பயணத்தின் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இலங்கை உட்பட உலகெங்கிலுமிருந்து சவுதி அரேபியாவுக்கு வருகை தரும் மில்லியன் கணக்கான ஹஜ் பயணிகளின் நல்வாழ்வு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் அதியுயர் வசதிகளுக்காக, இரு புனிதப் பள்ளிகளின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவுத் மற்றும் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவுத் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *