உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் :”ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில் கூட்டம் நடைபெறும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மே 01 பி.ப. 1.00 மணிக்கு பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறும். மே தினப் பேரணி, பொரளை சந்தியில் இருந்து ஆரம்பமாகும்.

“ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி” எனும் தொனிப்பொருளில் இம்முறை மே தினக்கூட்டம் நடைபெறும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெறும் இம்மே தினக் கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் வழி காட்டலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட மக்கள் உள்ளிட்ட நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும், கட்சியின் அபிமானிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *