உள்நாடு

Dutch-Lanka Friendship Foundation அமைப்பினால் அல்-ஜலால் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Dutch-Lanka Friendship Foundation அமைப்பினால் சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (28) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் எம்.எம். ஹிர்வஹான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், Dutch-Lanka Friendship Foundation அமைப்பின் சார்பில் அதன் உதவி செயற்றிட்ட முகாமையாளர் நிரஞ்சனி அவர்கள் கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திருமதி. அஸ்மா மலீக் அவர்களும் செயற்றிட்டத்தின் கல்முனை கல்வி வலய இணைப்பாளரும் முறைசாரா கல்விப் பிரிவின் ஆசிரிய ஆலோசகருமான சியாம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், இடைநிலைப் பிரிவின் அனைத்து மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், இடைநிலைப் பிரிவு பகுதித் தலைவர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

விசேட தேவையுடைய மாணவர்கள் தொடர்பிலான நலன்புரிகள் தொடர்பில் 2007 ஆண்டு வரை செயற்பட்டு வந்ததுடன் விசேட கல்விக்கான ஒரு பாடசாலையையும் நடாத்தி வந்த நிறுவனமான Dutch-Lanka Friendship Foundation அமைப்பானது, விசேட தேவையுடைய மாணவர்களை சாதாரண வகுப்பறைகளில் சேர்த்து கற்பிக்கும் நடைமுறையாக காணப்படும் உட்படுத்தல் கல்வியில் மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்ட வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்குமான கல்வி முன்னேற்றத்திற்கான வசதிகளை மேற்கொள்ளும் நோக்கில் அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *