உள்நாடு

முத்துக்கள் வட்சப் குழும ஏற்பாட்டில் சீனன்கோட்டையில் 1000 CCTV கெமராக்கள்

பேருவளை சீனங்கோட்டை முத்துக்கள் வடஸ் அப் குழுமம் ஆரம்பிக்கபட்டதில் இருந்து இன்று வரை சமார் மூன்று வருடங்களாக சீனன் கோட்டைப் பகுதியில் பாரிய சமூகப் பனிகளை செய்து வருகிறது.

இந்த வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக சீனன் கோட்டை பகுதியை உள்ளடக்கிய முக்கிய சந்திகளில் சீ.சீ.டீ.வீ கமராக்களை பொறுத்துவதற்கு முன்வந்துள்ளது.

பேருவளை பொலிஸாரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத் திட்டத்திற்கு பிரதேச பரோபகாரிகள், மேற்படி வட்ஸ்அப் குழும அங்கத்தவர்கள், சீனன்கோட்டை பகுதி நலன் விரும்பிகள் சீ.சீ.டீ.வீ கமராக்களை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

முக்கிய சந்திகள், சீனன்கோட்டை பத்தை சர்வதேச இரத்தினக் கல் வர்த்தக சந்தை, பாடசாலைகள், பள்ளி வாசல்கள், விளையாட்டரங்குகள், உள்ள பகுதிகள் சுமார் 1000 சீ.சீ.டீ.வீ கமராக்கள் பொறுத்தப்படவுள்ளது.

இது சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் மர்ஜான் பளீலுடன் குளும அங்கத்தவர்கள் கலந்துரையாடினர். இந்த வேலைத் திட்டத்திற்கு தனது முழுமையான ஒத்துழைப்பைபெற்றுத் தறுவதாக உறுதியளித்தார்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *