மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்
சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள வீதிக் கடவையால் பாதையின் மறுபக்கம் மாறுகையில் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் அவர்கள் மீது மோதியுள்ளார்.
குறித்த விபத்தில் அதிர்ஷடவசமாக 3 மாணவிகளும் சிறு காயங்களுக்குள்ளான நிலையிலே உள்ளனர்.
இதே நேரம், வீதியால் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்து வந்த இளைஞர் காதில் தொலைபேசியை வைத்து பேசிய படி ஒரு கையால் வாகனம் ஓட்டிவந்துள்ளார் என சம்பவ இடத்தில் நின்ற சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இது விடயமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துமாறு சம்பவத்தில் தொடர்புடைய மாணவிகளின் பெற்றோர் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
பொதுவாக பிரதான வீதிகளை மையமாகக் கொண்ட பாடசாலைகள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள் அமைந்துள்ள இடங்களில் எச் சந்தர்ப்பத்திலும் மிக அவதானமாக வாகனம் செலுத்தவேண்டியது நம் அனைவரினதும் மிகத் தலையாhய பொறுப்பாகும்.
(கியாஸ் ஏ. புஹாரி)
படம் – AI
