உள்நாடு

கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்தமைக்கு கிடைத்த பரிசு; ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவி சமீம் ஸலாமிக்கு இலவச ஹஜ் வாய்ப்பு

ஓட்டமாவடியைச் சேர்ந்த மௌலவி ஏ.எம்.சமீம் (ஸலாமி) அவர்களுக்கு இலவச ஹஜ் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த வருடம் அரசாங்கத்தின் இலவச ஹஜ் செல்லும் வாய்ப்பினை
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனீர் முளப்பர் ஓட்டமாவாடி மஜ்மா நகரில் கொரோனா ஜனாஸா நல்லடக்க பணியில் ஈடுபட்ட ஒருவருக்கு வழங்க நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.

அதில் சீட்டுக் குலுக்கல் முறையில் மௌலவி சமீம் ஸலாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் தலைமையில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் மத்தியில் இடம்பெற்ற சீட்டுக் குழுக்கல் மூலம் சமீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காலப் பகுதியில் சமூக நலன் கருதி ஓட்டமாவடி மஜ்மாநகர் கொவிட் மையவாடியில் அப்போது கடமையில் ஈடுபட்ட எட்டுப் பேருக்கு மத்தியில் இந்த சீட்டுக் குழுக்கல் முறை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே, மௌலவி ஏ.எம்.சமீம் ஸலாமி இலவச ஹஜ் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

தியாகத்துக்கு மத்தியில் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய இரவு பகாலா பாடுபட்ட நபர் மௌலவி சமீம் ஸலாமிக்கு இவ் வாய்ப்பு கிடைத்துள்ளமையை இட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான் – ஓட்டமாவடி நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *