மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சித் திட்ட செயலமர்வு
பேரிடர் நிலைமைகளின் போது மக்கள் நலச் செயற்பாடுகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வு மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் தலைமையில் (21) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக திருகோணமலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். சுதாகரன், மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் மற்றும் மாவட்ட உளவளத் துணை உத்தியோகத்தர் எம்.எஸ் நசீர்கான் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியிருந்தனர்.
மூதூர் பிரதேச செயலக உள வளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.எம். ரியாத் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில உதவி பிரதேச செயலாளர் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுட்டல் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

(எம்.ஏ.முகமட்)
