உலகம்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *