உலகம்

டிரம்பின் கருத்துக்கு இத்தாலி பிரதமர் கண்டனம்

மத்திய கிழக்குப் போர் விவகாரத்தில் அமைதி வேண்டி குரல் கொடுத்த போப்பாண்டவர் 14-ஆம் லியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

டிரம்பின் இந்தச் செயலுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“டிரம்பின் பேச்சு அநாகரீகமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என விளாசியுள்ள மெலோனி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகப் போரை எதிர்ப்பது போப்பாண்டவரின் உரிமை மட்டுமல்ல, அதுவே முறையானது என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *