சிங்கப்பூரில் ராயல் கிங்ஸ் குரூப்பின் 6 நிறுவனங்களுக்கு எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரங்கள்
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் தேசிய சேவைக்கு தொடர்ந்து சிறப்பான ஆதரவு வழங்கி வந்ததற்காக, 2026 ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ராயல் கிங்ஸ் குரூப்பின் ஆறு நிறுவனங்கள் எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளன. ஒரே விழாவில், ஒரே குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக தொழில்துறை மற்றும் சமூக வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
சிங்கப்பூரின் டெமாசெக் பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் சீ ஹொங் டாட்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த பாராட்டு அங்கீகாரங்களை வழங்கினார்.
தேசிய சேவையில் ஈடுபட்டு வரும் வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நாட்டுப்பற்றை கௌரவிப்பதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தேசிய சேவையை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகளையும் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
ராயல் கிங்ஸ் கன்சல்டன்சி பிரைவேட் லிமிடெட் (Royal Kings Consultancy Pte Ltd) நிறுவனத்தின் சார்பில், ராயல் கிங்ஸ் குரூப்பின் நிறுவனர், தலைவர் மற்றும் குழும தலைமை நிர்வாக அதிகாரியான சிராஜுதீன் எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். தொழில் வளர்ச்சியுடன் சமூகப் பொறுப்பையும் இணைத்து செயல்பட்டு, தேசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நிறுவன கலாச்சாரத்தை உருவாக்கிய அவரது தொலைநோக்கு தலைமைத்துவம் இந்த அங்கீகாரத்தின் மூலம் கவுரவிக்கப்பட்டுள்ளது.
ராயல் கிங்ஸ் புல்லியன் பிரைவேட் லிமிடெட் (Royal Kings Bullion Pte Ltd) நிறுவனத்தின் சார்பில், குழும இயக்குநர் இப்ராஹிம் பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். தேசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கி, சமூகப் பொறுப்புடன் செயல்படும் நிறுவனமாக ராயல் கிங்ஸ் புல்லியன் திகழ்ந்து வருகிறது.
ராயல் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், இயக்குநர் ஜாய் பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். பெண்கள் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், நிறுவன வளர்ச்சியையும், தேசிய சேவையை மதிக்கும் நிறுவன பண்பாட்டையும் திறம்பட முன்னெடுத்து வருவதற்காக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
ராயல் கிங்ஸ் குளோபல் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், மூத்த ஆலோசகர் ஜலாலுதீன் பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். சமூகப் பொறுப்பு, நேர்மையான நிர்வாகம் மற்றும் தேசிய நலனுக்கான நிறுவன பங்களிப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் அவரது ஆலோசனைகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சமூக சேவைக்கும் உறுதுணையாக இருந்து வருகின்றன.
ராயல் கிங்ஸ் பின்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், தலைமை தகவல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ரியாசுதீன் பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் புதுமைகள் மற்றும் நவீன நிதி தொழில்நுட்பத் தீர்வுகளை முன்னெடுத்து நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் அவரது தலைமையின் கீழ், தேசிய சேவைக்கு ஆதரவளிக்கும் நிறுவனக் கலாச்சாரமும் சமூகப் பொறுப்புணர்வும் மேலும் வலுப்பெற்றுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தையும், நாட்டிற்கான பொறுப்புணர்வையும் ஒருங்கிணைத்து செயல்படும் அவரது பங்களிப்பை இந்த அங்கீகாரம் சிறப்பிக்கிறது.
ராயல் கிங்ஸ் ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி ஹாரிஸ் பாராட்டு அங்கீகாரத்தைப் பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, ராயல் கிங்ஸ் குரூப்பிற்கு தொடர்ந்து எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரங்கள் கிடைக்க தேவையான ஒருங்கிணைப்பு பணிகள், ஆவணத் தயாரிப்பு, தொடர்பு ஏற்படுத்தல் மற்றும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதில் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார். அவரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும், ராயல் கிங்ஸ் குரூப்பின் தொடர்ச்சியான இந்த அங்கீகாரங்களுக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.
இந்த அங்கீகாரம் குறித்து சிராஜுதீன் கூறுகையில், “இந்த பாராட்டு அங்கீகாரம் எங்கள் நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; ராயல் கிங்ஸ் குரூப்பின் ஒவ்வொரு பணியாளருக்கும் கிடைத்த பெருமையாக நான் கருதுகிறேன். நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியை அர்ப்பணித்து சேவையாற்றும் தேசிய சேவை வீரர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை ஆதரிப்பது எங்கள் நிறுவனத்தின் கடமை மட்டுமல்ல, அது எங்கள் சமூகப் பொறுப்பும் ஆகும். எதிர்காலத்திலும் தேசிய வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் மனிதநேய சேவைகளில் ராயல் கிங்ஸ் குரூப் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கும்,” என்றார்.
ஒரே விழாவில் ராயல் கிங்ஸ் குரூப்பின் ஆறு நிறுவனங்களும் எஸ்.ஏ.எஃப். பாராட்டு அங்கீகாரங்களைப் பெற்றிருப்பது, தேசிய சேவைக்கு நிறுவனங்கள் வழங்கும் ஆதரவின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொழில் வெற்றியுடன் சமூகப் பொறுப்பு, தேசிய ஒற்றுமை மற்றும் மனிதநேய மதிப்புகளையும் இணைத்து செயல்படும் நிறுவனமாக ராயல் கிங்ஸ் குரூப் தனது தனித்துவத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் தலைமையிலான நிறுவனமாக, சர்வதேச அளவில் சமூகப் பொறுப்பு, தொழில்முனைவு மற்றும் தேசிய சேவைக்கான அர்ப்பணிப்பில் முன்னுதாரணமாக திகழும் ராயல் கிங்ஸ் குரூப், உலகத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
