உலகம்

அமெரிக்காவிற்கு சீனா கடும் எச்சரிக்கை

ஈரான் – சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, நேற்று காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

“ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு தேவைப்படும் மசகு எண்ணெய்யில் 40 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) 30 சதவிகிதமும் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை கைப்பற்றியிருக்கும் சூழலில், சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *