உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையின் இப்தார் நிகழ்வும், கலந்துரையாடலும்

பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையின் இப்தார் நிகழ்வும், விசேட கலந்துரையாடல் நிகழ்வும், பேருவளை மொல்லியமல அல்ஹாஜ் ஹசன் பாஸி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் அதன் தலைவர் கலாநிதி அஸ்வர் அஸாஹிம், அறக்கட்டளையின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், அறக்கட்டளையின் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர உதவும் வகையில் புலமைப்பரிசில் வழங்குவதற்காக இக்கல்வி அறக்கட்டளை ஸ்தாபிக்கப்பட்டதோடு, இதனால் பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

முஸ்லிம் மாணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளைச் சேர்ந்த சிங்கள மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டு வருகின்றன.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *