உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா கலாபீடத்தில் சுதந்திர தின நிகழ்வு

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி கலாபீட வளவில் காலை 8:00 மணிக்கு அதிபர் மௌலவி எம். ஏ. எம். அஸ்மிகான் (முஅய்யிதி) தலைமையில் நடைபெறும்.

கலாபீட நிர்வாக சபை தலைவர் சட்டத்தரணி அல் – ஹாஜ் எம் ஸீ எம் ஹம்ஸாவின் வழிகாட்டலின் கீழ் நடைபெறும் நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் மாணவர்களால் இசைக்கப்படுவதோடு நாட்டில் சாந்தி சமாதானம் ஐக்கியத்திற்காக விசேட துஆ பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதை சீனங்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும், ஜாமிஅதுல் பாஸிய்யா நிர்வாக உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அல்ஹாஜ் இஹ்ஸான் அபுல் ஹஸன் (நளீமி) நிகழ்த்த உள்ளார். அத்தோடு மரம் நடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டொருப்பதாக கலாபீட நிர்வாக சபை இணைச் செயலாளர் அல்ஹாஜ் முஸ்னி உவைஸ் தெரிவித்தார்.

சீனன்கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர்கள், பணிப்பாளர் மௌலவி எம். ஜே. எம். பஸ்லான் (அஷ்ரபி) உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், முழு நேர, மற்றும் பகுதி நேர மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வர்.

(பேருவளை பீ. எம்
முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *