உள்நாடு

சம்மாந்துறை “டேலன்ட் பிளஸ் டீவியின்” முப் பெருவிழா

விசம்மாந்துறை “டேலன்ட் பிளஸ் டீவியின்” முப் பெருவிழா சம்மாந்துறை நகர மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது(31)

அமைப்பின் தவிசாளர் முஹம்மட் சில்ஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட அரசாங்கதிபர் சிந்திக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாகவும், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித விதமுல்ல, சிரேஷ்ட பொலிஸ் அதிதியட்சகர் கே.ஏ.பீ.கஸ்தூர் ஆராச்சி, கௌரவ அதிதிகளாகவும், பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, பிரதே சபையின் தவிசாளர் ஐ. எல்.எம்.மாஹீர், திகாமடுல்ல மீடியா போரத்தின் தலைவர், ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ் சிரேஷ்ட அறிவிப்பாளர்களான எம். எஸ்.எம். இர்பான், இர்ஷாத் ஏ காதர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

டேலன்ட் பிளஸ் டீவியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பிலான செயலமர்வு அண்மையில் நாடாத்தப்பட்ட போது அச்செயலம்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளும் ஏற்பாட்டு குழுவினரால் கௌரவிக்கப்பட்டனர்.

(அம்பாரை மாவட்ட நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *