உள்நாடு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் முதல் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு

மலர்ந்துள்ள 2026 ஆம் ஆண்டு புது வருடத்தின் முதல்நாள் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமை புரியும் அனைத்து அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக (01) இடம்பெற்றது.

இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பால் பொங்கலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்காகவும், நாட்டில் உயிர் நீத்த அனைவருக்காகவும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் சர்வமத பிரார்த்தனையை தொடர்ந்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்,

எதிர்பாராத நெருக்கடி நிலமைகளின் பின்னணியில் நாம் எதிர்கொண்ட சமூக பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை முறையடித்து, நாம் ஒற்றுமையாக பயணிப்பதன் ஊடாக சிறந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். அத்தோடு அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள், எமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றும் போது நாட்டை முன்னேற்றிச்செல்லக்கூடிய சிந்தன எமக்கு உருவாகும். அரச உத்தியோகத்தர்களாகிய நாங்கள் எமது பொறுப்புக்களை சரிவர அறிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துக் கொண்டதோடு, அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் புதிய வருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

(ஏ.எச்.எம்.ஹாரீஸ்-மத்திய முகாம் செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *