இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம்
விபத்து தடுப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில், தேசிய விபத்து தடுப்பு ஆலோசனைக் குழுவின் வழிகாட்டலின் கீழ், சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புக்கான மையப் பிரிவான தொற்றா நோய்கள் பிரிவு, ஆண்டுதோறும் ஜூலை மாத ஆரம்பத்தின் முதலாவது திங்கள் முதல் வெள்ளி வரை தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு பத்தாவது (10) முறையாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 2025 ஜூலை 7 முதல் 11 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ள பல்வேறு இடங்களை சோதனையிடல் மற்றும் எதிர்காலத்தில் விபத்துகளின் அபாயத்தைக் குறைக்க குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுப்பது இதன் நோக்கமாகும்.
மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விபத்து தடுப்பு வாரத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, இதனுடன் தொடர்புடைய பிற தரப்பினருடன் இணைந்து நீண்ட காலத்திற்கு செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, விபத்து தடுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று, வீதி விபத்து தடுப்பு நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது.
