நிக்கவெவ ஜும்ஆ பள்ளியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு
ஹொரவப்பொத்தானை பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட நிக்கவெவ ஜாமியுல் மில்ஃபார் ஜும்ஆப்பள்ளி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் கடந்த (05) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் மதவாச்சி பூநேவ கடற்படை தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பங்களிப்பு மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம அதிதியாக அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஏ.பி.பலிஹேன கலந்து கொண்டார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினருக்கு பள்ளி பரிபாலன சபை மற்றும் ஊர் மக்கள் சார்பில் ஞாபக சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.





(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
