உள்நாடு

துமிந்த உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி மே மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக இரண்டு பெண்களும் ஆணொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *