அறபாவில் ஒன்று கூடிய இலட்சக் கணக்கான ஹாஜிகள்
புனித ஹஜ் கடமைக்காக உலகெங்கிலிருந்து வந்திருந்த இலட்சக்கணக்கான ஹாஜிகள் அறபா மைதானத்தில் ஒன்று திரண்டு நல்லமல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரமாண்டமான ஏற்பாடுகளை சவூதி அரேபிய அரசு அறபா மைதானத்தில் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






