குவைத்தில் டிவிஎஸ் ஹைதர் குழுமம் வெள்ளிவிழா; வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு 3 கிலோ தங்கம் பரிசளிப்பு
குவைத்தில் முன்னணி வணிகக் குழுமமாக இயங்கி வரும் டிவிஎஸ் ஹைதர் குழுமம், தனது 25வது ஆண்டுவிழாவை அண்மையில் சிறப்பாகக் கொண்டாடியது. முத்துப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் . எஸ்.எம். ஹைதர் அலி தலைமையில் செயல்படும் இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பலவித நிகழ்வுகளை நடத்தியது.
150-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் வெள்ளிவிழாவில், 1000 வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன. அதோடு, மூன்று கிலோ தங்கம் ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதோடு, டாக்டர் . ஹைதர் அலியின் தனிப்பட்ட நெகிழ்ச்சியான சமூகப் பொறுப்பு உணர்வும் நிகழ்வின் முக்கிய அம்சமாக இருந்தது.
விழாவில் இலங்கைச் சேர்ந்த ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏகேஎஸ் விஜயன்,
தமிழக காவல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் அலெக்சாண்டர் ஐபிஎஸ், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முஹம்மது ஜியாவுதீன், ஊடகவியலாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் முக்தார் அஹம்மது, நம் நாட்டின் பிரபல கவிஞரும், தமிழ்ச் சினிமா பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய சிறப்பம்சம்களில் ஒன்றாக கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய கவிதை அரங்கில் வாசிக்கப்பட்டது. உணர்வூட்டும் அந்தக் கவிதை பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து டாக்டர் . ஹைதர் அலி அவரை பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
விழாவினை துபாயை சேர்ந்த பிரபல தொகுப்பாளினி சாரா மற்றும் சேலம் ஆர்ஜே குட்டி பிரகாஸ் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.
இரண்டு நாள் நிகழ்விலும் பிரபல மாயஜால நிபுணர் விக்னேஸின் மாயஜால அரங்கேற்றம் காண்போரை வியக்கவைத்தது.
வணிக வெற்றியுடன் சமூகப் பொறுப்பையும் முன்னெடுத்து வரும் டிவிஎஸ் ஹைதர் குழுமத்துக்கு
உலகமெங்கும் 30 கிளைகளை உள்ளன. ஹைதர் குழுமத்தின்
இந்த விழா, தொழில்துறையில் சமூகத்தன்மையை நிரூபிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளதோடு வளைகுடாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.



(றிபாஸ்)