மக்காவில் ஒன்று திரளும் இலட்சக்கணக்கான ஹாஜிகள்
2025 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலக நாடுகளில் இருந்தும் பெருமளவான ஹாஜிகள் மக்காவுக்கு வந்துள்ளனர்.
தமது உம்ரா கடமையை நிறைவேற்ற புனித ஹ்ரம் ஸரீபில் கஃபாவை வலம் வருவதுடன் சபா மர்வா ஆகிய இடங்களில் தொங்கோட்டம் ஓடி தமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.
இம்முறை சவுதி அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்கி மக்கா மதீனா பகுதிகளுக்குள் உள் நுழைந்தவர்களை பூரணமாக பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் சவுதி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





(மக்காவில் இருந்து ஏ.எஸ்.எம்.ஜாவித்)