Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனுராதபுர மாவட்டத்தில் பூர்த்தி.

அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி சபைகளின் தேர்தலுக்கான வாக்களிப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான ரஞ்சித் விமலசூரிய தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 225 இடங்களில் 680 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.226 மையங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நடைபெறும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 320 வேட்பாளர்கள் போட்டி இடுவதுடன் இதில் 410 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இந்த தேர்தலில் வட்டார மட்டத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதுடன்.மாவட்டத்தின் சகல  முடிவுகளும் அனுராதபுரம் மத்திய வித்தியாலயத்தில் இருந்து வெளியிடப்படவுள்ளது.

தேர்தல் பணிகளுக்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில் தலைமை அலுவலகர் ,  உதவி தேர்தல் அலுவலர், மூத்த வாக்குச்சாவடி அலுவலகர், எழுத்தாளர் , உதவி எழுத்தாளர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் அண்மித்த பணிப்பாளர்கள்  பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் அனுராதபுரம் மாநகர எல்லைக்குட்பட்ட ஜெயந்தி மாவத்தை ,கெப்பித்திகொல்லாவ உள்பத்த மற்றும் கெக்கிராவ நகரம் ஆகிய மூன்று வட்டாரங்கள்  இரட்டை வட்டாரங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.தேர்தல் கடமைகளுக்கான பாதுகாப்பில் 2340 பொலிசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமைகளுக்காக 800 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

அனுராதபுரம் மாவட்டத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு 161 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் அதில் 123 முறைப்பாடு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலக அதிகாரி தெரிவித்தார் .

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *