Saturday, May 9, 2026
Latest:
உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது.

சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கே சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர், மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அபுல்ஹஸன், சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளரும், தேசிய பயிற்றுவிப்பாளரும், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக சிறுவர் விளையாட்டு இணைப்பாளருமான எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லாஹ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர், மகளிர் விவகார பொலிஸ் பொறுப்பதிகாரி திருமதி ஐ.பி.நிலாந்தி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *