விளையாட்டு

ஆசிய சர்வதேச கராத்தே போட்டியில் மினுவாங்கொடை அல் அமானின் அஷ்பாக் முதலிடம்

2024ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை சந்தித்த அல்அமான் மகா வித்தியாலயத்தின் (மினுவாங்கொடை, கல்லொழுவை) பிரமாணமிக்க மாணவரான முகம்மத் அஷ்பாக், 2025 மே 3ஆம் திகதி இடம்பெற்ற முதல் ஆசிய சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுப் பாடசாலைக்கும் நாடுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Kempo Genbu Ryu என்ற முழுமையான (Full Contact) கராத்தேப் பயிற்சிப்பள்ளியின் பிரதிநிதியாக பங்கேற்ற அஷ்பாக், கட்டா (Kata) பிரிவில் முதல் இடத்தையும், குமிடே (சண்டை) பிரிவில் மூன்றாம் இடத்தையும் வென்றுள்ளார்.

World Martial Arts Council (WMAC) நிறுவனத்தின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கராத்தே வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தனது விடாமுயற்சி, ஒழுங்கமைந்த பயிற்சி மற்றும் மனோதிடத்தினால் இந்த வெற்றிகளை எட்டியுள்ளார் அஷ்பாக். இவரது சாதனை, பாடசாலையின் நற்பெயரையும், இலங்கையின் கௌரவத்தையும் சர்வதேச நிலைப்பாட்டில் மேலும் உயர்த்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் மத்தியில் மோகமட் அஷ்பாக் அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எதிர்கால போட்டிகளிலும் மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

(ஊடகவியலாளர் – ஏ .சி பௌசுல் அலிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *