களுத்துறை மாவட்ட செயலகம்-வருட ஆரம்ப சத்தியப் பிரமாணம்
களுத்துறை மாவட்ட செயலகத்தின் 2025 புத்தாண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் ஜனக கே குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப் பிரமாண நிகழ்வு மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இந்த புதுவருட கடமை ஆரம்ப சம்பிரதாய நிகழ்வுகளின் விஷேட அம்சமாக ஜனாதிபதியின் எண்ணக் கருவியான “தூய்மையான இலங்கை” திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை உத்தியோகத்தர்கள் எடுத்துக் கொண்டனர்.
மேலும் ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டத்தின் நேரலையை உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர் .மாவட்ட செயலக பணியாட்கள் குழைத்துக் அரச அதிபர் புத்தாண்டு வாழ்த்துறை வழங்கினார்.
இந்த நிகழ்வில் அவர் மேலும் கருத்துரையாற்றுகையில்:-சிறந்த பண்பான அரச சேவைக்காக அனைவரும் ஒன்றுபட்டு அர்ப்பணத்துடன் செயலாற்ற வேண்டும் எனவும் தேவைகளுக்காக வரும் மக்களுக்கு ஆகக்கூடிய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டின் தேசிய வளத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.








எம்.எஸ்.எம்.முன்தஸிர்
