உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டம்

பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டமொன்று பேருவளை மருதானை வத்திமராஜபுரவில் தலைவர் எம். நிஸாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.

அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான அல்-ஹாஜ் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பொதுச் செயலாளர் கலாநிதி. மெளலவி அஸ்வர் அஸாஹிம் (அல்-அஸ்ஹரி) உட்பட உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்.

2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வறிய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் திட்டம் உட்பட கல்வி அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அப்ரார் கல்வி நிலையம் கடந்த 12 வருடங்களாக இப் பகுதி குறைந்த வருமானம் பெறும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு தொடர்ந்து புலமைப் பரிசில் வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *