உள்நாடு

கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்ட கட்டாரின் தேசிய தினம்

கட்டார் நாட்டின் தேசிய தினம் நேற்று புதன் கிழமை கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வு இலங்கைக்கான கட்டார் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் மாலதீவு நாடுகளுக்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் அல் சொறூர் தலைமையில் கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை சிறப்பாக இடம் பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் சுனில் கந்துன்நெத்தி கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வில் பிரதி சபாநாயர் றிஸ்வி சாலி, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுன்றத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உலமாக்கள், அரச தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதம அதிதி மற்றும் தூதுவர் உள்ளிட்டவர்கள் இணைந்து கேக் வெட்டி நிக்ழ்வினை சிறப்பித்தனர்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *