“மஸ்ஜித் நிர்வாகங்களும் பாடசாலையும் இணைந்து செயற்படல்” கம்பளை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கலந்துரையாடல்
கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலையின் கெளரவ அதிபரின் வேண்டுகோளின் பேரில் “மஸ்ஜித் நிர்வாகங்களும் பாடசாலையும் இணைந்து செயற்படல்” எனும் கருப்பொருளில்
மகிழ்ச்சியான, நல்லிணக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு கலந்துரையாடல் 2024.11.10 ம் திகதி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கம்பளை நகர மற்றும் புறநகர் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் மஸ்ஜித்களின் நிர்வாகிகளும் பிரதிநிதிகளும் மிகவும் ஆசை ஆர்வமாக பங்கேற்றதுடன் சிறந்த பாடசாலை சமுதாயத்தை கட்டி அமைப்பதற்கான பயனுள்ள நல்ல பல யோசனைகளையும் முன்வைத்தனர்.
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலை அழகான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை உணர்ந்த மஸ்ஜித்களின் நிர்வாக உறுப்பினர்கள் மகிழ்ச்சியும் மனத் திருப்தியும் அடைந்ததுடன் தங்கள் நன்றிகள், பாராட்டுக்கள் மற்றும் பிரார்த்தனைகளை முன்வைத்தனர். குறித்த திட்டத்தை அமுல்படுத்த தங்கள் முழுமையான ஒத்துழைப்பை தருவதாக அதிபர் முன்னிலையில் அனைவரும் உறுதியளித்தனர்.



